
செய்திகள் மலேசியா
நாய்களுக்கு விஷம் கொடுப்பதை ஊக்குவிக்கும் முகநூல் பதிவு குறித்து விலங்குகள் உரிமை குழுக்கள் போலிசில் புகார்
செந்தூல்:
சிரம்பானில் உள்ள பண்டார் ஸ்ரீ செண்டாயானில் தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்வதை ஊக்குவிக்கும் ஒரு முகநூல் பதிவு தொடர்பாக பல விலங்குகள் உரிமை குழுக்கள் போலிசில் புகார் அளித்துள்ளன.
மலேசிய தெரு விலங்குகள் சங்கம், ஃபர்ரிகிட்ஸ் சேஃப்ஹேவன், மலேசிய விலங்கு நல சங்கம், உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, பல ஆர்வலர்களால் நேற்று செந்தூல் போலிஸ் தலைமையகத்தில் இந்த புகாரை பதிவு செய்தன.
114,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட செண்டாயன் மகாம்-மகாம் அடா என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவுகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தப் பதிவில் இடப்பட்ட கருத்துக்கள், அந்தப் பகுதியில் தெருநாய்களுக்கு விஷம் கொடுத்து கொல்வதை ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.
விலங்குகளுக்கு எவ்வாறு தீங்கு விளைவிப்பது என்பது குறித்த சேர்க்கைகள், விரிவான வழிமுறைகள் உட்பட இந்தக் கருத்துக்கள் வருத்தமளிக்கிறது,
மேலும் விலங்கு நலச் சட்டங்களை தெளிவாக மீறுவதாகவும் உள்ளன என்று குழு ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm