நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருவர் மீது ஆசிட் வீசும் அளவிற்கு நானும் ஜேடிதியும் கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்து போகத் தேவையில்லை: துங்கு இஸ்மாயில்

ஜொகூர்பாரு:

ஒருவர் மீது ஆசிட் வீசும் அளவிற்கு நானும் ஜேடிதி கிளப்பும் அவ்வளவு  கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்து போகத் தேவையில்லை.

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் இதனை கூறினார்.

சிலாங்கூர்  கால்பந்து வீரர் பைசல் ஹலிம் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கும் ஜேடிதி கிளப்புக்கும் தொடர்புபடுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்த துங்கு இஸ்மாயில்,

இந்த சம்பவத்தை தன்னுடன் இணைக்கும் முயற்சிகளை ஒரு கோழைத்தனமான, பொறுப்பற்ற செயல் என்று விவரித்தார்.

பைசல் ஹலிம் சம்பவத்தில், என்னை இணைக்க முயற்சிக்கும் கிசுகிசுக்கள்,  ஊகங்கள் இருந்தன.

நானும் ஜேடிடியும் அந்த அளவுக்குக் கீழ்த்தரமாகச் செல்லத் தேவையில்லை. இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனக்கு ஏதாவது சொல்லவோ செய்யவோ இருந்தால், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்குப் பின்னால் நான் ஒளிந்து கொள்ள மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset