நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்

நியூயார்க்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், 2020 தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்தவருமான ஜோ பைடன், தற்போது தீவிரமான சிறுநீரக புற்றுநோயால் (prostate cancer) பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பைடனுக்கு Gleason க்லிஷன் Score 9 என்ற மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது, இது புற்றுநோயின் ஆபத்தான நிலையில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், அந்த நோய் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாகத் தெரிகிறது. அவரது வயது 82 என்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது  இருப்பினும் நவீன ஹார்மோன் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா மட்டுமல்லாது, உலகத் தலைவர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பைடனின் விரைவான குணமடைய பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர். கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப், உள்பட பலர் “பைடன் ஒரு போராளி, இந்த சவாலையும் அவர் தாண்டுவார்” என உறுதியாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset