நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்

கலிஃபோர்னியா:

முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 'G' சின்னத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' சின்னத்தில் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது .

'G' சின்னத்தில் தனித்தனியாக இருந்த சிஉவ்வ்சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு நிறங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், நிறங்களின் திடத்தன்மையும் குறைக்கப்பட்டுள்ளது. 

கூகுள் தொடர்ந்து புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புதுப்பிப்பு தற்போது iOS மற்றும் பிக்சல் சாதனங்களில் காணப்படும் என்று 9to5Google அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.

இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் நிறுவனம் இன்னும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset