நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

10  நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு

செவில்லே: 

லுப்தான்ஸா ரக ஏர்பஸ் ஏ321 விமானம் ஜெர்மனியிலிருந்து ஸ்பெயின் நோக்கி பறந்து கொண்டிருந்தது. 

அந்த விமானத்தில் 199 பயணிகளும் 6 விமான பணியாளர்களும் பயணித்தனர். 

இந்நிலையில், விமானி அறையில் இருந்து வெளியேறிய விமானி அவசரத்திற்காக கழிவறைக்கு சென்றுள்ளார்.

இதனால், விமானம் முழுவதும் துணை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

அப்போது, துணை விமானிக்கு லேசாக மயக்கம் வந்துள்ளது. திடீரென்று அவர் அப்படியே சரிந்து விட்டார். 

வெளியே சென்ற விமானி மீண்டும் விமானி அறைக்குள் வர முயன்றபோது, அதன் கதவு பூட்டிக்கொண்டது.

விமானத்தின் கேப்டன், கதவை திறக்க பலமுறை முயன்றுள்ளார்

அவசரகால குறியீட்டு முறையை பயன்படுத்தியும் கதவை திறக்க முடியவில்லை. மேலும் துணை விமானியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

துணை விமானிக்கு சுயநினைவு ஏற்பட்டு மீண்டும் விமானம் விமானியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொடர்ந்து விமானம் மெட்ரிட் நகருக்கு திருப்பி விடப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 

விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கினர். பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset