
செய்திகள் உலகம்
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
டெல் அவிவ்:
காசாவில் இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். சுமார் 250 இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் போராளிகள் மீது போர் தொடுத்த இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில் பணய கைதிகளில் பலரை போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையிலும் ராணுவ நடவடிக்கை மூலமும் மீட்டுள்ளது.
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை முதல் கடும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் 24 மணி நேரத்தில் 146 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்த பிறகு காசா மீதான கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மத்திய கிழக்கு நாடுகள் பயணத்தை, புதிய போர் நிறுத்தத்தை நோக்கி எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை முடித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:12 am
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 15, 2025, 10:32 am
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm