நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை 

மெக்சிகோ சிட்டி:

டிக் டாக் நேரலையின் போது சமூக ஊடக பிரபலமும் மாடல் அழகியுமான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்த சம்பவம் மெக்சிகோவில் நிகழ்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BLOSSOM THE BEAUTY LOUNGE எனும் அழகு ஒப்பனை கடையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது. 

23 வயதான வலேரியா மார்குவேஸ் டிக் டாக் நேரலை செய்து கொண்டிருந்தார். அத்துடன் நேரலையில் இருந்த 105,000 பின்தொடர்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் 

ஆயுதம் ஏந்தி கடைக்குள் நுழைந்த ஆடவன் ஒருவர் அப்பெண்ணை சுட்டுக்கொலை செய்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் தப்பித்து சென்றான். 

பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset