நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து ஹட்யாய் பகுதியில் சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்ட 10 மலேசியர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டது 

சொங்கலா: 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாய்லாந்து நாட்டின் ஹட்யாய் பகுதியில் சட்டவிரோத கார் பந்தயத்தில் ஈடுபட்ட 10 மலேசியர்களுக்கு எதிராக தாய்லாந்து போலீஸ் அபராதம் விதித்தது. 

அதிகாலை 1.30 மணிக்கு GREENWAY BAZAAR பகுதியில் சட்டவிரோத கார் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆறு ஆண்களும் நான்கு பெண்களும் ஈடுபட்டிருந்தனர். 

சட்டவிரோத கார் பந்தயம் தொடர்பாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். 

அதில் ஆறு மலேசிய பதிவு செய்யப்பட்ட கார்கள் ஈடுப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. 

அனைத்து பத்து மலேசியர்களுக்கும் 5000 பாட் அல்லது 640 ரிங்கிட்  அபராதம் விதிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset