நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி

லண்டன்: 

இங்கிலாந்தின் தென் கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. 

விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் முன்பு கூட்டுப்போர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.

ஆனால் தற்போது அந்த ராணுவ தளங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.கைவிடப்பட்ட அந்த ராணுவ தளம் தற்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் வைப்பதற்காக பயன்படுகின்றது

இந்த ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. 

ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகின

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset