செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா சாம்பியன்
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளனர்.
ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் வில்லாரியல் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியிடம் தோல்வி கண்டனர்.
இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும் பார்சிலோனா அணியினர் 85 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
அதே வேளையில் இந்த சீசனுக்கான லா லீகா கிண்ணத்தையும் அவ்வணியினர் வென்றுள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ரியல்பெதிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 2:57 pm
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது
March 5, 2026, 2:12 pm
ஜொகூர் தாருல் தாசிம், ஹிரோஷிமாவில் வெற்றி ஓட்டத்தை தொடர தயார்: ஜிஸ்கோ முனோஸ்
March 5, 2026, 9:32 am
ரொனால்டோவுக்கு காயம்
March 5, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 4, 2026, 5:12 pm
'Marc Marquez' உலகின் சிறந்த ஆண் வீரர் விருதுக்கு பரிந்துரை
March 4, 2026, 9:40 am
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
March 4, 2026, 9:36 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 3, 2026, 10:44 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
March 3, 2026, 10:41 am
