செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக் காலிறுதிப் போட்டியில் அல்-அஹ்லி, ஜேடிதி அணியை எதிர்கொள்கிறது
கோலாலம்பூர்:
ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் எலைட் தொடரின் காலிறுதிப் போட்டியில், ஜேடிதி அணி சவூதி அரேபியாவின் முன்னணி அணியான அல்-அஹ்லியை எதிர்கொள்ள உள்ளது.
இன்று அதிகாலை, கூடுதல் நேரம் வரை நீடித்த மேற்கு மண்டல சுற்று 16ஆவது போட்டியில், அல்-துஹைல் அணியை அல்-அஹ்லி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதை அடுத்து இந்த மோதல் உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, மார்ச் 25 அன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிக்கான குலுக்கலில் அல்-அஹ்லி, அல்-துஹைல் அணிகளுக்கு இடையேயான போட்டியின் வெற்றியாளரை ஜேடிதி எதிர்கொள்ளும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்தப் போட்டி ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது.
இந்தச் சூழ்நிலையால் ஜேடிதி அணி தங்களின் உண்மையான எதிரணியை அறிந்துகொள்ளக் காத்திருக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக, இந்த உயர்மட்ட ஆசியப் போட்டியின் காலிறுதிக்கு ஜேடிதி முன்னேறியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 11:10 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்
April 14, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
April 13, 2026, 10:40 am
இளம் வீரர்களுடன் அசத்திய லியோனல் மெஸ்ஸி
April 13, 2026, 10:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 12, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
April 12, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
April 11, 2026, 9:50 pm
சொந்த மண்ணில் தோல்வி: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதில் அர்செனலுக்குப் பெரும் பின்னடைவு
April 11, 2026, 11:40 am
