நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சரவாக்கில் 17 வயதுக்குட்பட்டோருக்கான புட்சால் போட்டி; சுக்மா போட்டிக்கான திறமைகளைக் கண்டறியும் ஒரு களம்: மோர்டி

கூச்சிங்:

சரவா 17 வயதுக்குட்பட்டோருக்கான புட்சால் சாம்பியன் போட்டி இளம் திறமைகளைக் கண்டறிவதற்கும் முக்கிய களமாக அமைந்தது.

அதே வேளையில் வரும் ஆகஸ்ட் மாதம் சிலாங்கூரில் நடைபெறும் 22ஆவது சுக்மா உள்ளிட்ட பல போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாகக் கருதப்படுகிறது.

மாநில அளவிலான இந்த போச்சி, அதிக திறனுள்ள வீரர்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான முக்கிய தளமாகும்.

இதன் மூலம் அவர்கள் மேலும் போட்டித்தன்மை வாய்ந்த மட்டத்தில் போட்டியிட முடியும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் மோர்டி பிமோல் கூறினார்.

இன்று  நடைபெற்ற இந்த சாம்பியன் போட்டியில், சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதை யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்தது.

போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில், மேலும் தரமான போட்டித் தளங்களை வழங்குவதன் மூலம் அடிமட்ட அளவில் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

கல்வியமைச்சும், விளையாட்டு சங்கங்களுடன் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் மூலம் விளையாட்டுச் சூழலை வலுப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

மேலும் இளம் விளையாட்டு வீரர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உடற்பயிற்சி, விளையாட்டு, இணைப் பாடச் செயல்பாடுகள் மதிப்பீட்டை செயல்படுத்துவது ஒரு முக்கிய அடித்தளம்.
இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, பள்ளி  சமூக மட்டங்களில் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளிக்க, சமூக விளையாட்டு நிதி  மூலம் அமைச்சு 8,000 ரிங்கிட் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்






தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset