நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லீட்ஸ் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியிடம் தோல்வி கண்டனர்.

லீட்ஸ் யுனைடெட் அணியின் இரு வெற்றி கோல்களை நோவா ஒகாபோர் அடித்தார்.

சொந்த அரங்கில் களமிறங்கி தோல்வி கண்டு மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தங்களின் ரசிகர்களை ஏமாற்றி உள்ளனர்.

லா லீகா கால்பந்து போட்டியில் லெவான்தே அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset