நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சொந்த மண்ணில் தோல்வி: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதில் அர்செனலுக்குப் பெரும் பின்னடைவு

லண்டன்:

சொந்த மண்ணில் அடைந்த தோல்வியால் இங்கிலாந்து பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதில் அர்செனலுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஏஎப்சி போர்னமௌத் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியிடம் தோல்வி கண்டனர்.

அர்செனல் அணியின் இந்த அதிர்ச்சிகரமான தோல்வி, ஞாயிற்றுக்கிழமை செல்சியை எதிர்கொள்ளும்போது, ​​

அர்செனலின் ஒன்பது புள்ளிகள் முன்னிலையை ஆறாகக் குறைக்கும் வாய்ப்பை மென்செஸ்டர் சிட்டிக்கு வழங்கியுள்ளது.

பட்டத்திற்கான இந்த இரு அணிகளும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை எத்திஹாட் அரங்கில் சந்திக்கின்றனர்.

இங்கு அர்செனல் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, இந்த ஆட்டம் இப்போது மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உண்மையில், சிட்டிக்கு எதிரான கரபாவ் கிண்ண இறுதிப் போட்டியில் தோற்றது, சௌத்ஹாம்டன் அணியிடம் தோற்று எப்ஏ கிண்ண போட்டியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அர்செனல் அணி போட்டிகளில் அடைந்துள்ள இது மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியாகும்.

மேலும் கடந்த மூன்று சீசன்களாக இரண்டாம் இடத்தையே பிடித்த நிலையில், 22 ஆண்டுகளில் அவர்கள் தங்களின் முதல் பட்டத்தை வெல்வார்களா என்பதில் இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset