நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர்  அபார வெற்றியை பதிவு செய்தனர்.

காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ஸ்பான்யோல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணிக்காக பெரான் தோரஸ் இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை லெமானே யமால், மார்கஸ் ராஸ்போர்ட் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் 79 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் செவிலா அணியிடம் தோல்வி கண்டனர்.

ரியால் சோஷிடாட் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset