நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும்: ஜொமோட்டோ அறிவிப்பு

புது டெல்லி: 

ஜொமோட்டோ, ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்விக்கி மற்றும் அதன் ஆன்லைன் உணவு விநியோக போட்டியாளரான ஜொமோட்டோ ஆகியவை மழைக் காலத்துக்கான அதன் கோல்டு உறுப்பினர் சலுகைகளில் புதிய மாற்றத்தை செய்துள்ளது.

இதன்படி நேற்று முதல் (வெள்ளிக்கிழமை), மழைக் காலத்தின் போது கோல்டு உறுப்பினர்களுக்கு இனி சர்ஜ் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது. 

எனவே பணம் செலுத்தும் கோல்டு சந்தாதாரர்கள் கூட இனி மழை பெய்யும்போது உணவு விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
 
நிறுவனம் இந்த மாற்றத்தைப் பற்றி செயலியில் அறிவிப்பு மூலம் பயனர்களுக்குத் தெரிவித்துள்ளது. அதில், "மே 16 முதல், மழையின்போதுகட்டண விலக்கு உங்கள் கோல்டு சலுகைகளின் ஒரு பகுதியாக இருக்காது" என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சர்ஜ் கட்டணத்தின் சரியான தொகையை ஜொமோட்டோ இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. 

கடினமான வானிலை காலங்களில் பணிபுரியும் டெலிவரி பணியாளர்களுக்கு சிறந்த இழப்பீட்டை வழங்க இந்த கூடுதல் கட்டணம் உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஸ்விக்கி ஒன் (Swiggy One) சந்தாதாரர்கள் உட்பட அதன் பயனர்களிடமிருந்து இதேபோன்ற மழைக்காலக் கட்டணத்தை வசூலிக்கிறது. 

இது போன்ற கட்டணங்கள் விரைவில் அனைத்து உணவு விநியோக தளங்களிலும் பொதுவானதாக மாறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset