நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒன்பது சேமப்படை அதிகாரிகளின் மரணத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

தெலுக் இந்தான்: 

அபாயகரமான முறையில் லாரியைச் செலுத்தி ஒன்பது சேமப்படை அதிகாரிகளின் மரணத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 

இருப்பினும் குற்றஞ்சாட்டப்பட்ட 45 வயதான ருடி சுல்கார்னாயின் தனக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் மறுத்து விசாரணை கோரினார். 

முதலாவது குற்றச்சாட்டின் அடிப்படையில் 44 வயதான எஸ். பெருமாளின் மரணத்திற்குக் காரணமான ஹினோ ரக லாரி ஓட்டுநர் அபாயகரமான முறையில் லாரி செலுத்தினார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

கடந்த மே 13ஆம் தேதி காலை 9.05 மணிக்கு ஜாலான் சுங்கை மானிக், ஹிலிர் பேராக் மாவட்டத்தில் இந்த குற்றத்தை அவர் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

மற்றொரு குற்றச்சாட்டில் ஏனைய சேமப்படை அதிகாரிகளின் மரணத்திற்கும் அவர் காரணமாக இருந்துள்ளார் என்று குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. 

1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்‌ஷன் 41(1)இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது வாகன உரிமம் ரத்து செய்யப்படும் 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதி நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset