நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

148 இந்திய சிறு தொழில் வர்த்தகர்களுக்கு வர்த்தக உதவிப் பொருட்கள்; மித்ராவின் வாயிலாக வழங்கப்பட்டது: பிரபாகரன்

சிரம்பான்:

மித்ராவின் வாயிலாக 148 இந்திய சிறு தொழில் வர்த்தகர்களுக்கு வர்த்தக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன்.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பி. பிரபாகரன் இதனை தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  ஒரு  குடும்பத்தில் ஒரு தொழில் அதிபரை உருவாக்கும் திட்டத்தை மித்ரா மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சொந்த வியாபாரம் தொடங்க விரும்புவோருக்கு அதற்கான உதவிப் பொருட்களை மித்ரா வழங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சபையின்  ஒத்துழைப்புடன் 148 பேருக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தலா 5 ஆயிரம் ரிங்கிட் என மொத்தம் 740,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிரம்பானில் நடைபெற்ற நிகழ்வில் வர்த்தர்களுக்கு உதவிப் பொருட்கள் எடுத்து வழங்கிய பிரபாகரன் இவ்வாறு கூறினார்.

மாநில  இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் தலைவர் மு. திருநாவக்கரசு தலைமையில்,  

இந்திய வர்த்தகர்கள் உதவும் பெரும் இத்திட்டத்தை வெற்றிப் பெற செய்த அனைவரையும் எனது பாராட்டுகள் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா  உட்பட பலர் கலந்துக் கொண்டர்.

இந்திய சமுதாதத்திற்காக பல்வேறு உதவி திட்டங்களை மித்ரா முன்னேடுத்து வரும் வேளையில்,

வீட்டிற்கு ஒரு தொழில் அதிபரை உருவாக்குவதற்கு ஒருவர்  தொழில் தொடங்க  20,000 ரிங்கிட்  கடன் இல்லாத உதவி நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset