
செய்திகள் மலேசியா
இலக்கவியல் துறை தொடர்பான சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் மலேசியாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை தரும்: கோபிந்த் சிங்
புத்ராஜெயா:
இலக்கவியல் துறை தொடர்பான சீன நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் மலேசியாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை தரும்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகம், சீனா இன்டர்நேஷனல் கேபிடல் கார்ப்பரேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா, மலேசியா கேம், இலக்கவியல் உள்ளடக்க நிதி என 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதி உருவாக்கப்பட உள்ளது.
2011 முதல் 2023 வரை மலேசியாவின் இலக்கவியல் உள்ளடக்கத் துறையின் மொத்த வருமானம் 87.25 பில்லியன் ரிங்கிட்டாகும்.
ஏற்றுமதி 11.18 பில்லியன் ரிங்கிட், முதலீடுகள் 80.26 பில்லியன் ரிங்கிட் என பதிவாகியுள்ளது.
இந்தத் இலக்கவியல் உள்ளடக்கத் துறை 2023ஆம் ஆண்டில் 8,200 வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
குறிப்பாக 300க்கும் மேற்பட்ட இலக்கவியல் உள்ளடக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தத் துறை 2023ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் ரிங்கிட் அளவிலான உள்ளூர் உற்பத்தி மதிப்பை பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சி, மலேசியாவின் இலக்கவியல் உள்ளடக்கத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான அஸ்திவாரமாகும் என அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 5:24 pm
ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும்: நிதியமைச்சகம் உறுதி
May 16, 2025, 2:57 pm