நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா-  ரஷ்யா நெருக்கமான உறவினால் பிற நாடுகளின் அரச தந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்படாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம் 

கஸான்: 

மலேசியா- ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நெருக்கமாக இருப்பதால் பிற நாடுகளின் அரச தந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்படாது. 

ரஷ்யாவுடனான மலேசியாவின் அரச தந்திர உறவு என்பது வெற்றி அல்லது சார்ந்திருப்பது என்பது அல்ல. மாறாக, மலேசியா அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரஷ்யாவுடன் நெருக்கமாக உள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ரஷ்யாவுடன் மலேசியா நெருக்கமாக நட்பு பாராட்டுவதால் அமெரிக்கா உட்பட சில நாடுகளின் அரச தந்திர உறவுகளை பலவீனம் செய்யும் நோக்கம் அல்ல. 

இதனை பிரதமர் அன்வார் திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னதாக, ரஷ்யா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றுடன் பயணத்தை முடித்து கொண்டு தாயகம் திரும்புகிறார். 

ரஷ்யா நாட்டின் அலுவல் பயணத்தின் போது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின், ரஷ்யா பிரதமர் மிக்கேய்ல் மிசுஸ்தின் இருவரையும் சந்தித்தார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset