
செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத்தில் குப்பை கழிவுகளை ஆற்றில் வீசினால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்: துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் திட்டவட்டம்
இஸ்கண்டார் புத்ரி:
ஜொகூர் மாநிலத்தில் குப்பை கழிவுகளை ஆற்றில் வீசும் எந்தவொரு நபர் அல்லது தரப்பாக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் திட்டவட்டமாக கூறினார்.
அண்மைய காலமாக ஜொகூர் மாநிலத்தில் சில பொறுப்பற்ற தரப்பினர் ஜொகூர் ஆறுகளில் குப்பை கழிவுகளை வீசிய சம்பவம் குறித்தும் அவர் வேதனை அடைந்ததாக துங்கு மஹ்கோத்தா இஸ்மாரில் சொன்னார்.
இதன் காரணமாக மாநில அரசாங்கம் மாநில மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாதிரியான சம்பவங்கள் ஜொகூர் மாநிலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும். குப்பை கழிவுகளை ஆற்றில் வீசும் சம்பவம் தொடர்பாக மாநில அரசாங்கம், உள்ளூர் அமலாக்க தரப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்.
முன்னதாக, 15ஆவது ஜொகூர் மாநில சட்டத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் இவ்வாறு கூறினார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 5:24 pm
ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும்: நிதியமைச்சகம் உறுதி
May 16, 2025, 2:57 pm