நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலை சமூகத்தின் பங்களிப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப் தகவல் 

கோலாலம்பூர்: 

நாட்டின் மேம்பாட்டிற்கு வேலை சமூகத்தின் பங்களிப்பு அதிகளவில் இருக்கிறது. 

வேலை செய்வதற்கான ஊக்குவிப்பு, முதல் தர வகுப்பு சிந்தனை, நேர்மை பண்புகள் ஆகியவை வேலை சமூகத்தில் முக்கிய இடம்பெறுவதால் நாட்டை முன்னேற்ற பாதைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் கூறினார். 

அரசாங்க துறையோ தனியார் துறையோ எந்த துறையாக இருந்தாலும் நாட்டை மேம்படுத்தும் கடப்பாடு வேலை சமூகத்திற்கு உள்ளது. 

அதனை கொண்டு நிலையான மற்றும் பிணைப்புமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என்று எரிசக்தி, நீர் உருமாற்ற அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் அதன் அமைச்சரான ஃபாடில்லா யூசோஃப் இவ்வாறு கருத்துரைத்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset