
செய்திகள் மலேசியா
மலாக்காவில் பயங்கர சாலை விபத்து: பெண் சிறை கண்காணிப்பாளர் பலி
மலாக்கா:
மலாக்கா மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில் பெண் சிறை கண்காணிப்பாளர் ஒருவர் பலியானார்.
பாதிக்கப்பட்ட பெண் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள், சிமென்ட் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று மாலை சுங்கை ஊடாங் - பாயா ரும்புட் பகுதியில் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட பெண் யமஹா இகோ ரக மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்ததாகவும் சாலை சமிஞ்சை விளக்கு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் கிரிஸ்டோபர் பதிட் கூறினார்.
வேக கட்டுப்பாட்டை இழந்த சிமென்ட் லாரி மோட்டார் சைக்கிளை மோதியது. விபத்தில் சிக்கிய பெண்ணின் கால் முறிந்த வேளையில் கடுமையான காயங்களுக்கு இலக்கானார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது தடுப்பு காவல் பிறப்பிக்க்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய சிமென்ட் லாரி வாகன பரிசோதனைக்காக புஸ்பாகோம் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-மவித்திரன்