நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்சநிலை மாநாடு: 7 ஆயிரம் போலீஸ், 2 ஆயிரம் குடிநுழைவு துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள் 

கோலாலம்பூர்: 

மே மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக உள்துறை அமைச்சு இதன் இறுதி கட்ட தயார் நிலையில் உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். 

மலேசியாவிற்கு வருகை தரும் முதன்மை நுழைவாயில்களில் சுமார் 7227 போலீஸ் அதிகாரிகளும் 2000க்கும் மேற்பட்ட குடிநுழைவு துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். 

இதனிடையே, குடிநுழைவு, பாதுகாப்பு அம்சங்களைக் கண்காணிக்க ASEAN செயலவை கூட்டமைப்பு உள்துறை அமைச்சு அதிகாரம் வழங்கியுள்ளது. 

இந்த அதிகாரத்தின் வாயிலாக வெளியுறவு அமைச்சு, பிரதமர் துறை இலாகா, தரப்புடன் இணைந்து ஒத்துழைப்பு நல்கப்படும் என்று சைஃபுடின் விவரித்தார். 

நாட்டின் உள்ளே வருவதும் பிறகு  வெளியேறும்  நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் சீராக அமைய இது உதவிடும் என்று சைபுடின் சொன்னார். 

ஆசியான் உச்சநிலை மாநாடு எதிர்வரும் மே 26 முதல் மே 28ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset