
செய்திகள் மலேசியா
பிகேஆர் கட்சித் தேர்தல் கட்சியைப் பிளவுபடுத்தாது: டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தகவல்
கோலாலம்பூர்:
பிகேஆர் கட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்று கொண்டிருந்தாலும் பிகேஆர் கட்சித் தேர்தல் கட்சிக்குள்ளே பிளவை ஏற்படுத்தாது என்று பிகேஆர் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
பிகேஆர் கட்சி மக்களுக்கும் முன்னுரிமை வழங்குவதுடன் நாட்டின் விவகாரத்தில் முக்கிய நோக்கம் கொண்டிருப்பதாக சைஃபுடின் சொன்னார்.
கடந்த பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சி 30 இடங்களில் வெற்றிக்கொண்டன. இருப்பினும் பிகேஆர் கட்சி தேர்தலில் சில முன்னணி தலைவர்கள் வெற்றிப்பெறுவது தோல்வி அடைவது என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகும்.
எதிர்காலத்தில் மக்களால் பிகேஆர் கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதே முதன்மையான கேள்வியாகும். பிகேஆர் கட்சி மலேசிய அரசியல் நீரோடையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அரசியல் கட்சியாகும்.
அடுத்த பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சி இன்னும் அதிகமான இடங்களை வெல்லும் என்று தாம் நம்பிக்கை கொள்வதாக உள்துறை அமைச்சரான சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 5:24 pm
ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும்: நிதியமைச்சகம் உறுதி
May 16, 2025, 2:57 pm