நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார் 

புதுடெல்லி: 

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset