
செய்திகள் இந்தியா
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
புது டெல்லி:
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை ஊழியர் விஷால் யாதவ், ஒவ்வொரு உளவு தகவலுக்கும் ரூ.50,000 வாங்கியுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் யாதவ், டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு கடற்படையின் ரகசிய தகவல்களை வழங்கி வந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பிரியா சர்மா என்ற உளவாளி பெண்ணிடம் விஷால் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
கைதான விஷால் யாதவ், ராஜஸ்தான் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். நாளடைவில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்தேன்.
அப்போது சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.
கடற்படை சார்ந்த சில விவரங்களை பிரியா சர்மா கோருவார். அந்த தகவல்களை அவருக்கு வழங்குவேன்.
ஒரு தகவலுக்கு ரூ.6,000-ஐ அவர் எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்பார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது மிக முக்கியமான தகவல்களை கோரினார்.
கடற்படை வட்டாரத்தில் இருந்து அந்த தகவல்களை பெற்று பிரியா சர்மாவுக்கு தெரிவித்தேன். அப்போது ஒரு தகவலுக்கு ரூ.50,000-ஐ அவர் வழங்கினார் என்று விஷால் யாதவ் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm