நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன

புது டெல்லி: 

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் 19 பாதுகாப்பு வாகனங்கள் கலப்பட பெட்ரோலால் திடீரென பழுதாகி நின்றன. இதையடுத்து பெட்ரோல் நிரப்பிய பங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

ரத்லம் மாவட்டத்தில் முதல்வர் மோகன் யாதவ் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அவரின் பாதுகாப்புக்காக வந்த 19 பாதுகாப்புப் படை, காவல் துறை வாகனங்களுக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டது.

ஆனால், சிறிது தூரம் சென்றதுமே 19 வாகனங்களும் திடீரென அடுத்தடுத்து பழுதாகி நின்றுவிட்டன.

இதனால், பாதுகாப்பு வீரர்கள் அந்த கார்களைத் தள்ளிச் சென்று சாலையோரத்தில் நிறுத்தினர்.

ஒரே நேரத்தில் பழுதானது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வாகனங்களில கலப்பட எரிபொருள் நிரப்பியதுதான் பிரச்னைக்கு காரணம் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெட்ரோல் பங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset