நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்

மும்பை: 

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும், நெருங்கிய உறவினரரும் நவநிர்மான் சேனா கட்சித் தலைவரும் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டாகப் பேரணி நடத்துகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பால் தாக்கரேயின் சிவசேனையில் இருந்து ராஜ் தாக்கரே விலகி மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியைத் தொடங்கினார்.

எதிரும் புதிருமான இருந்த இவர்கள், முதல்முறையாக இணைந்து ஹிந்திக்கு எதிராக பேரணி மேற்கொள்ளவுள்ளது மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேசிய கல்வி கொள்கையைப் பின்பற்றி, மகாராஷ்டிர அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்று  அரசு உத்தரவு வெளியிட்டது.

இந்தப் பேரணிக்கு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset