நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநில எரிவாயு, எண்ணெய் உட்படுத்திய மூன்று முக்கிய விவகாரங்களைத் தீர்க்க பிரதமர் இணக்கம்: சரவாக் மாநில பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி தகவல் 

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தை உட்படுத்திய எரிவாயு, எண்ணெய் குறித்த மூன்று முக்கிய விவகாரங்களைத் தீர்க்க பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்தார். 

சரவாக் மாநில பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி ஒப்பெங் இதனை கூறினார். 

பெட்ரோனாஸ் நிறுவனம், சரவாக் அரசாங்கம், சரவாக் பெட்ரோலியம் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் இடையே முக்கியமான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில் சரவாக் மாநில எரிவாயு, எண்ணெய் விவகாரத்தை தீர்க்க பிரதமர் அன்வாரும் தாமும் ஓர் உடன்படிக்கையில் கையெழுதிட்டதாக பிரிமியர் சரவாக் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி சொன்னார். 

PETRONAS, PETROS ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெரிய அளவிலான எரிவாயு வர்த்தகத்தை முன்னெடுக்க முடியும். வர்த்தக அடிப்படையில் இது ஆசியான் நாடுகளுக்கு வழங்கப்பட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset