
செய்திகள் இந்தியா
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
ஸ்ரீநகர்:
போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டுரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.
போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சண்டை நிறுத்தம் என்று இரு நாடுகளும் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது.
பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கி வருகிறது. இதற்கு இந்தியாவும் உடனடி பதிலடி கொடுத்தது.
ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் டுரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.
ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
நக்ரோட்டாவிலும் பாகிஸ்தாம் அனுப்பிய டுரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:39 am
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
June 20, 2025, 6:03 pm
"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு ராகுல் காந்தி பதில்
June 20, 2025, 5:57 pm
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
June 20, 2025, 4:20 pm
கூட்டங்களை கையாள புதிய சட்டம்
June 19, 2025, 7:26 pm
ரூ.3,000-க்கு 200 முறை டோல் கேட்டை கடக்க புதிய பாஸ்டேக்
June 19, 2025, 2:56 pm
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி: ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது
June 19, 2025, 12:11 pm
ஈரானிலிருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் தில்லி வந்து சேர்ந்தனர்
June 18, 2025, 9:43 pm