நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா

புதுடெல்லி:

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படுவதை இந்தியா உறுதிப்படுத்துவதாக இந்திய நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். 

போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைப்பேசியில் பேசினர் என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். 

இதனிடையே இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்தியா -பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset