நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு  மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்

சிப்பாங்:

கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு வழித்தடம் வழங்க போக்குவரத்து அமைச்சும் மலேசிய ஏர்போர்ட் வாரியமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மலேசியாவிலிருந்து சபரிமலைக்கு செல்கின்றனர்.

இப் பக்தர்கள் இந்தியாவுக்கு செல்லும் போது கேஎல்ஐஏ விமான நிலையங்களில் ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ஆகையால் விமான நிலையத்தில் பக்தர்களுக்கு சிறப்பு வழியை அமைத்து தர வேண்டும் என மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி கோரிக்கையை முன்வைத்தார்.

இக் கோரிக்கையை போக்குவரத்து அமைச்சின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்தாண்டு மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வாண்டு மீண்டும் பக்தர்களுக்கு அச்சலுகை வழங்க வேண்டும் என இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

மலேசிய ஏர்போர்ட் வாரியத்தைச் சேர்ந்த முஹம்மத் அசஹார் தலைமை தாக்கினார். 

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், மலேசிய ஏர்போர்ட் வாரிய அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருப்பதற்கு மீண்டும் சிறப்பு இடம் ஒதுக்கப்படும்.

அதே வேளையில் சோதனையிடங்களும் அவர்களுக்கு சிறப்பு இடம் வழங்கப்படவுள்ளது.

உம்ரா, ஹாஜ் யாத்திரைக்கு செல்பவர்கள் போல் ஐயப்ப பக்தர்களுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்படும் என முடிவு செய்யப்பட்டது.

ஆக இந்த வாய்ப்பை மலேசிய ஐயப்ப பக்தர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

குறிப்பாக அனைத்து பக்தர்களும் ஒற்றுமையாக யாத்திரியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வேளையில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் ஆகியோருக்கு நன்றி என குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset