நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடமைகளை நிறைவேற்றுவதில் இனம், தோல் நிறம் ஒரு தடையல்ல:  ஹன்னா 

கோலாலம்பூர்:


அமைச்சருக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் இனம், தோல் நிறம் ஒரு தடையல்ல.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதிய அமைச்சரவையில் ஹன்னா இயோ கூட்டரசுப் பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதன் அடிப்படையில் இன்று சரியாக காலை 8 மணிக்கு தனது அமைச்சர் பணியை தொடங்கினார்.

இதன் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹன்னா, இது ஒரு புதிய அதிகாரப்பூர்வ கடமையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 

மேலும் இனம் அல்லது தோல் நிறம் கடமைகளைச் செய்வதற்கான திறனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது என்று அவர் கூறினார்.

அவருடன் அலுவலகத்திற்குள் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் லோ சு ஃபூய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset