செய்திகள் மலேசியா
பிள்ளைகளுக்கு இலவசமாக தேவாரம், சமய வகுப்புகளை நடத்தும் ஆலய நிர்வாகத்தின் சேவை பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
பத்துமலை:
பிள்ளைகளுக்கு இலவசமாக தேவாரம், சமய வகுப்புகளை நடத்தும் தெலுக் பங்க்லிமா கராங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் சேவை பாராட்டுக்குரியது என்று மஹிமா தலைவரும் டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தோற்றுநருமான டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
இவ்வாலயத்தின் தேவாரம், சமய வகுப்பு மாணவர்களுக்கு கலைக்கூடத்தை பார்வையிட இலவச டிக்கெட்டுகளுடன் மதிய உணவை வழங்கியது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
வாராந்திர தேவாரம், சமய வகுப்புகளை ஏற்பாடு செய்வதில் ஆலய நிர்வாகத்தின் முன்முயற்சி, மாணவர்களை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பரந்த வெளிப்பாட்டை வழங்குவது ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.
மேலும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜாவை சந்தித்து ஆசிர்வதிக்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து அவருடன் ஒரு சந்திப்பும் நடைபெற்றது.
டான்ஸ்ரீ நடராஜா மாணவர்களை அன்புடன் வரவேற்று, செய்யப்பட்ட சிந்தனைமிக்க ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இவ்வளவு இளம் வயதிலிருந்தே இந்து சமயத்தை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்ட ஆலய நிர்வாகம், பெற்றோருக்கு பாராட்டுகள் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
கடமைகளை நிறைவேற்றுவதில் இனம், தோல் நிறம் ஒரு தடையல்ல: ஹன்னா
December 22, 2025, 10:37 am
டத்தோஸ்ரீ நஜிப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: நஜிப்பிற்கு வீட்டுக் காவல் இல்லை
December 22, 2025, 10:31 am
தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் பெருமைமிகு சாதனை படைத்த மலேசிய அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 22, 2025, 9:27 am
நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நஜிப்பிற்கு ஆதரவாக ஒன்றுக் கூடிய ஆதரவாளர்கள்
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
