செய்திகள் மலேசியா
விமானத்தில் இருமுடி, நெய், தேங்காய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க வேண்டும்: யுவராஜா குருசாமி
சிப்பாங்:
விமானத்தில் இருமுடி, நெய், தேங்காய்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆக ஐயப்ப பக்தர்கள் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டார்.
48 நாட்கள் விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்ய சபரிமலைக்கு செல்கின்றனர்.
அப்படி செல்லும் பக்தர்கள் விமான நிலையங்களில் பல சிக்கல்களக் எதிர்நோக்குகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து துறை அமைச்சு கடந்தாண்டு பக்தர்களுக்கு சிறப்பு வழித் தடத்தை ஏற்பாடு செய்து தந்தது.
இது மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்தது.
இந்நிலையில் இவ்வாண்டு மீண்டும் ஐயப்ப பக்தர்களுக்கு இச்சலுகை வழங்கப்படவுள்ளது.
இவ்வேளையில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆகியோருக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதே வேளையில் கிடைக்கும் சலுகைகளை ஐயப்ப பக்தர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக விமானத்தில் நெய், தேங்காய் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பொருட்கள் விரைவாக தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை புரிந்துகொண்டு ஐயப்ப பக்தர்கள் இருமுடி நெய் தேங்காய்களை கொண்டு செல்வதை தவிர்த்துக் கொள்ளலாம்.
மேலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முன்கூட்டியே தங்களின் பயண அட்டவணைகளை மலேசியா ஐயப்ப சேவா சங்கத்திடம் தெரிவிக்கலாம்.
இதன் மூலம் விமான நிலையங்களில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதை எளிதாக்கலாம்.
ஆக மொத்தத்தில் விமான நிலையங்களில் பக்தர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த வாய்ப்புகளை ஐயப்ப பக்தர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
