நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

சுகாதாரத் துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு தேவை: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

சூழலுக்கு ஏற்ப மருத்துவத் துறையில் சிகிச்சைகள் உட்பட புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஆசியான் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

மலேசிய மருத்துவ ஆராய்ச்சி (CRM) , உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசியான் ஆய்வு நிறுவனங்களுக்கிடையில் மேம்பட்ட ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். 

மருத்துவத் துறையில் முக்கிய நிறுவனங்கள் கணிசமான லாபத்தைப் பதிவு செய்வது சுகாதாரத் துறைக்குச் சுமையாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, நோயாளிகளுக்கும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

ஆக, இந்த ஒத்துழைப்பு அவசியமானது என்று அவர் சுட்டிக் காட்டினார். 

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 CRM சோதனை இணைப்பில் அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset