
செய்திகள் வணிகம்
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
இஸ்லாமாபாத்:
இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கராச்சி-100 குறியீட்டெண் 6,272 புள்ளிகள் அதாவது 6 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முந்தைய செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 1,13,568.51 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டு 1,07,296.64 புள்ளிகளாக ஆனது. இதேபோன்று, கேஎஸ்இ-100 குறியீடும் 3.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
அதேநேரம், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் மந்த நிலையில் காணப்பட்டாலும் இறுதியில் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள் ஏற்றம் கண்டு 80,746.78 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 24,414.40-ல் நிலைத்தது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 23 முதல் மே 5 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேஎஸ்இ-100 குறியீட்டெண் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am
மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது
August 4, 2025, 6:30 pm
பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது
August 1, 2025, 6:09 pm