
செய்திகள் இந்தியா
BREAKING NEWS: இந்தியா தாக்குதலைத் தொடங்கியது: பாகிஸ்தான் முகாம்களை குறிவைத்து தாக்குதல் - மூவர் பலி
காஷ்மீர்:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்திவருவதாக கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் பொதுமக்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம் இந்தியக் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
இது 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேரடியாக இராணுவ முறையில் மோதும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்திய இராணுவம் தெரிவித்ததில், பாகிஸ்தான் ராணுவ வசதிகள் எதுவும் தாக்கப்படவில்லை.
மேலும் தாக்குதல் திட்டமிட்ட, கட்டுப்பாட்டுள்ள பயங்கரவாத முகாம்களையே நோக்கி மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது அளவுகோலோடு, மேம்பட்ட ரீதியில், மோதலுக்கு வழிவகுக்காத வகையில் என விவரிக்கப்பட்டது.
அதே நேரத்தில், பாகிஸ்தான் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து, மூவர் உயிரிழப்பு, பன்னிரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அஸிஃப் கூறியதாவது,
இந்தியா வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்து தாக்கியுள்ளது. இதற்கு உரிய பதிலடி விரைவில் வழங்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm
டெல்லியில் கனமழையால் விமானங்கள் ரத்து: வீடு இடிந்து விழுந்து 4 பேர் பலி
May 1, 2025, 7:59 pm