நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய மருத்துவ முகாம் 

ஆயர் தாவார், 

பேராக் மாநிலத்தின் முக்கியமான தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில், கடந்த 3 மே 2025 (சனிக்கிழமை) முன்னாள் மாணவர் சங்கத்தின் சமூகப் பொறுப்புடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

சுமார் 200 பேர் பங்கேற்ற இம்முகாமில், பொதுநலன் கருதி பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமை மாநில சுகாதார, மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு, இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் திறந்து வைத்து உரையாற்றினார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு வழிகாட்டி

“முன்னாள் மாணவர்கள் நடத்திய இந்தத் திட்டம், மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கே ஒரு முன்னுதாரணமாக அமைகிறது. இதுபோன்ற சமூக அடிப்படையிலான பங்களிப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்” சிவநேசன் குறிப்பிட்டார்.

அதேநாளில், பள்ளி கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘ஒரு வகுப்பு, ஒரு விவேக தொலைக்காட்சி’ திட்டத்தின் கீழ், 12 வகுப்பறைகளில் 70 அங்குல விவேக டிஜிட்டல் தொலைக்காட்சிகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதை ஒட்டி சிறப்பு விழா நடத்தப்பட்டது. தொழில்நுட்ப ஆதரவுடன் மாணவர்களின் கற்றலை உயர்த்தும் வகையில் இந்த முயற்சி பெரிதும் பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர், சமூகத் தலைவர்கள் மற்றும் பல முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்  இந்நிகழ்ச்சி, தமிழ்ப்பள்ளி வளர்ச்சியில் சமூக பங்களிப்பும், ஒற்றுமையும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும் நேரடி சான்றாக அமைந்தது.

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset