நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் ஆட்சியாளர்களால் மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும்: ஹம்சா

கோலாலம்பூர்:

மலாய் ஆட்சியாளர்களால் மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும் என்று பெர்சத்து துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

நாட்டின் நிர்வாகத்தில் மலாய் சமூகத்தை அதிக ஆதிக்கம் செலுத்தச் செய்வதற்காக மலாய் கட்சிகளை ஒன்றிணைப்பதில் மலாய் ஆட்சியாளர்கள் முக்கிய பங்கை வகிக்க முடியும்.

80 ஆண்டுகளுக்கு முன்பு மலாயன் யூனியன் மூலம் முழுமையான காலனித்துவத்திற்கான பிரிட்டிஷ் முயற்சியை எதிர்ப்பதில்,

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மலாய் சமூகங்களை ஒன்றிணைக்கும் ஆட்சியாளர்களின் திறனை வரலாறு நிரூபித்துள்ளது.

தலைமை தாங்குவது மட்டுமல்லாமல் நம்பகமான ஒரு மன்னரை நியமிப்பதன் மூலம் மலாய்க்காரர்களின் இயல்பு, சமுதாயத்தை - உம்மத்தை ஒன்றிணைப்பதில் ஆட்சியாளர்களின் பங்கை அதிகப்படுத்தியது.

எனவே இன்று நடப்பதைப் பார்க்கும்போது, ​​ மலாய்க்காரர்கள் ஒன்றுபட விரும்பினால் மலாய் ஆட்சியாளர்கள் முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.

1946 இல் மலாயன் யூனியனுக்கு எதிரானது பற்றிப் பேசுவது, கிளந்தான், ஜொகூர், கெடா, அனைத்து மலாய்க்காரர்களும் எவ்வாறு ஒன்றுபட்டு இறுதியில் அம்னோவை உருவாக்கப்பட்டது என அவர் நினைவுக்கூர்ந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset