நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க மலேசியா தயார்: பிரதமர் அன்வார் தகவல் 

கோலாலம்பூர்: 

இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உச்சத்தை அடைந்துள்ளதால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் மலேசியா வருகையை ஒத்திவைத்துள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை மலேசியா தணிக்க தயாராக உள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சுயேட்சையான, வெளிப்படைத்தன்மையான விசாரணை அவசியம். 

இருப்பினும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நாடு மறுத்து வருகிறது. ஆனாலும் இந்தியா பாகிஸ்தான் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset