நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூச்சிங் விமான நிலையத்தில் CPR மூலம் ஆணின் உயிரைக் காப்பாற்றியப் பெண் 

கூச்சிங்: 

கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் CPR மூலம் ஒரு பெண் ஆணின் உயிர் காப்பாற்றும் காணொலி சமுக ஊடகத்தில் பொது மக்களின கவனத்தை ஈர்த்துள்ளது. 

சிகிச்சை பெறுவதற்காக ஏப்ரல் 30-ஆம் தேதி லா என்ற  55 வயதான ஆடவர் சிபுவிலிருந்து கூச்சிங்கிற்கு தனியாக விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அன்று காலை 11.30 மணியளவில் அவர் கூச்சிங் விமான நிலையத்தில் தரையிறங்கி, உள்நாட்டு வருகை முனையத்திலிருந்து வெளியேறியபோது, ​​திடீரென மயங்கி விழுந்தார். 

அங்கே இருந்த இளம் பெண் உடனியாக அவருக்கு CPR முதலுதவி செய்து அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்று லா-வின் மருத்துவர் Dr Tan Sie Hing தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார். 

அவரது உயிரைக் காப்பாற்றிய பெண்ணை அடையாளம் கண்டு  அவருக்கு நன்றி தெரிவிக்க அவரது குடும்பத்தினர் எண்ணம் கொண்டிருப்பதாக Dr Tan Sie Hing முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset