நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பட்டாணியில் 'ஒற்றை-கட்ட வயரிங் & தொழில்முனைவோர்' பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழா 

சுங்கை பட்டாணி

MiSI என்னும் இந்திய திறன்  முன்னெடுப்புவின்      முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒற்றை-கட்ட மின் வயரிங் & தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழா சுங்கை பட்டாணியில் சிறப்பாக நடைபெற்றது.
 
இந்த திட்டம் ஒற்றை-கட்ட மின் வயரிங் துறையில் அதிக இளம் இந்திய தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதும், இந்திய சமூகத்தினரிடையே மிகவும் திறமையான பணியாளர்களை மேம்படுத்துவதும் நோக்கமாகும்.

 இந்த நிறைவு விழாவில் மனிதவள அமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரி (அமைசர் ஸ்டீவன் சிம்) டிக்காம் லூர்து கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினார். 

கூடுதலாக இந்நிகழ்ச்சியில் SOCSO-வின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்தின் கீழ் உள்ள பல்வேறு முயற்சிகள் பற்றிய முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதில் MyFutureJobs, சுயதொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKIM SPS) மற்றும் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKSSR) ஆகியவை அடங்கும்.

இதனிடையே வரும் 10 மே 2025 அன்று கெடா சுங்கை பட்டானியில் உள்ள ப்யூரெஸ்ட் தங்கும்க் விடுதியில் வேலை வாய்ப்பு சந்தை நடைபெறும் என்றும் SOCSO அறிவித்துள்ளது. 

இந்தத் திட்டம் பங்கேற்பாளர்களுக்கும் உள்ளூர் இந்திய சமூகத்திற்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களைப் பெறவும், சாத்தியமான முதலாளிகளை நேரடியாகச் சந்திக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset