
செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கான அரசு முறை பயணத்தை ஒத்திவைத்தார் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப்: பிரதமர் அன்வார் தகவல்
புத்ராஜெயா:
மலேசியாவுக்கான அரசு முறை பயணத்தை பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் ஒத்திவைத்துள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வெள்ளிக்கிழமை அட்டவணையிடப்பட்ட இந்த சந்திப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு பிரதமர் அறிவித்திருந்ததாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் அவர் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார். எந்தவொரு பயங்கரவாதத்தையும் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும் இந்த தாக்குதல் தொடர்பில் சுயேட்சையான விசாரணை ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹம்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 இந்திய நாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 6:00 pm
மறைந்த பாக் லாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
May 5, 2025, 5:08 pm
அதிகாரத்திற்காக மொஹைதின் மாறுகிறார்: அக்மல் சாலே
May 5, 2025, 5:07 pm
கெஅடிலான் உச்சமன்றக் கூட்டத்தில் ரபிசி கலந்து கொண்டார்: பிரதமர்
May 5, 2025, 5:06 pm
ஆவணத்தில் நஜிப்பின் கையொப்பத்தை தடயவியல் ஆய்வாளரால் சரிபார்க்க முடியவில்லை
May 5, 2025, 4:55 pm
நச்சு உணவு சம்பவம் தொடர்பாக உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்படும்: மொஹ்தார் புங்குட்
May 5, 2025, 4:22 pm