நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பானது குறைக்கப்படுவும் வாய்ப்புள்ளது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 24 விழுக்காடு வரி விதிப்பை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மலேசியா - அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பானது குறைக்கப்படுவும் வாய்ப்புள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். 

கடந்த ஏப்ரல் 22 முதல் 24ஆம் தேதி வரை மலேசியாவைப் பிரதிநிதித்து முதலீடு, வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் வாஷிங்டனுக்குச் சென்று வரி விதிப்பு தொடர்பாக கலந்துரையாடினார். 

மலேசியா மீது வரி விதிப்பை குறைக்கும் நடவடிக்கை என்பது தற்போது ஆரம்ப கட்ட படிநிலைகளில் உள்ளது. 

அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்றால் ஆசியான் எனும் கூட்டமைப்பின் இணக்கமும் இதில் அவசியமாகிறது என்று அன்வார் விளக்கமளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset