நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 95 இலக்கிடப்பட்ட உதவித்தொகையை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: ஹம்சா சைனுடின் வேண்டுகோள் 

கோலாலம்பூர்: 

நாட்டில் ரோன் 95 இலக்கிடப்பட்ட எரிவாயுக்கான உதவி தொகை, மின்சார கட்டணத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும். 

எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் இந்த வேண்டுகோளை விடுத்தார். 

உலகளாவிய நிலையற்ற பொருளாதார சூழலில் நாடிட்ன் கொள்கை மாறுதல்கள் என்பது கட்டண அழுத்தத்தையும் வணிக ரீதியிலான பாதிப்பினையும் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். 

எதிர்வரும் ஜூன் மாதம் திட்டமிட்டிருக்கும் எரிவாயு, மின்சார கட்டணங்கள் உயர்வு போன்றவற்றை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த 30 விமானங்களை வாங்குவதையும் அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாக லாருட் நாடாளுமன்ற உறுப்பினராக ஹம்சா சொன்னார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பை முறையாக ஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழு ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset