நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரினி தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி குழு விளையாட்டும் பெற்றோர் தினமும் களைகட்டியது

ஜொகூர்பாரு:

ரினி தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டும் குடும்ப தினமும் பள்ளியின் திறந்த மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. 

இந்த நிகழ்வில் பாலர்பள்ளி காலை, மாலை பிரிவினைச் சேர்ந்த கம்பர், பாரதி வகுப்பு இளம் சிட்டுகள் விளையாட்டுகளில் தங்கள் விவேகத்தைக் காட்டினர். 

பிள்ளைகளின் விளையாட்டுத் திறமையைக் காணும் பொருட்டு ஆர்வமுடன் நிகழ்விற்கு வருகையளித்த பெற்றோர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியை  சு.தமிழ்ச்செல்வி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜொகூர் மாநில பாலர் பள்ளிகள், ஆரம்பப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநரும், ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளருமான  இரா.இரவிச்சந்திரன் மாணவர்கள் இது போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவதன்வழி சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் எனக் கூறியதோடு. 

செயற்கைத் தீபச்சுடரை ஒளியூட்டி அதிகாரப்பூர்வமாக விளையாட்டுப் போட்டியினைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, 

இம் மாணவர்கள் 50 மீ.ஓட்டத்திலும் குழு விளையாட்டுகளிலும் சற்றும் சளைக்காது ஆர்வமுடன் தங்களின் திறமைகளைக் காட்டி சிறப்பாக விளையாடினர். 

பாலர்பள்ளியின் விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக நீல இல்லம் தடம் பதித்தது. 

தொழிலதிபர் தினகரன் இப் போட்டி விளையாட்டிற்காக நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பாலர்பள்ளியின் குழு விளையாட்டும் குடும்ப தினமும் நடைபெற தூணாய் நின்ற துணைத் தலைமையாசிரியர்கள், பாலர்பள்ளி ஆசிரியர்கள், பாலர்பள்ளி உதவியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் பிரகாஷ், அவர்தம் செயலவையினர், பெற்றோர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset