
செய்திகள் விளையாட்டு
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
பெர்லீன்:
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டியில் பாயன் மியூனிக் அணி 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்றது.
இன்று அதிகாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயன் மியூனிக் அணியின் முதன்மை போட்டியாளர் அணியாக கருதப்படும் பாயன் லெவெர்குசன் அணி 2-2 என்ற கோல் கணக்கில் ஃப்ரெய்புக் அணியிடம் சமநிலை கண்டதால் பாயன் மியூனிக் வெற்றியை தன் வசமாக்கியது.
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டியின் புள்ளிப்பட்டியலில் பாயன் மியூனிக் 76 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் வேளையில் பாயன் லெவெர்குசன் அணி 68 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பாயன் மியூனிக் அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்களே உள்ளதால் தற்போது அவர்கள் லீக் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் முன்னணி காற்பந்து வீரரான HARRY KANE பாயன் மியூனிக் அணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரராக விளையாடி வரும் நிலையில் இதுவரை அவ்வணிக்காக 60 கோல்களைப் புகுத்தியுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 8:57 am