
செய்திகள் இந்தியா
போர் பதற்றத்தின் எதிரொலி: ஆப்கானிஸ்தான் உலர் பழங்களின் விலை இந்தியாவில் 25% வரை உயர்கிறது
புதுடெல்லி:
அட்டாரி - வாகா எல்லை மூடல் ஆப்கானிஸ்தான் உலர் பழ வர்த்தகத்தை பாதித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதன் விலை 10 முதல் 25% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அரசும் பாகிஸ்தானின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதில் ஒன்றாக, பஞ்சாபிலுள்ள அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லை வழியாகத்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அந்நாட்டின் உலர் பழங்கள் இறக்குமதி ஆகின்றன.
உலகிலேயே ஆப்கானிஸ்தானில் விளையும் உலர் பழங்களுக்கு பெரிய தேவை உள்ளது. உலர் பழங்கள் விற்பனை என்பது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நல்ல பொருளாதாரப் பலனையும் அளிக்கிறது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலால், அட்டாரி - வாகா எல்லை வழியாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்தியாவுக்கான உலர் பழ வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுபாடுகள் காரணமாக இந்தியாவில் உலர் பழங்கள் விலை 10 முதல் 25 சதவிகிதம் உயரும் எனக் கருதப்படுகிறது. இது இந்தியப் பயனர்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2025, 5:01 pm
டெல்லியில் கனமழையால் விமானங்கள் ரத்து: வீடு இடிந்து விழுந்து 4 பேர் பலி
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm